Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மதுபான விஷயத்தில் ஞானமாகத் தீர்மானம் எடுங்கள்

மதுபான விஷயத்தில் ஞானமாகத் தீர்மானம் எடுங்கள்

மதுபான விஷயத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே சுயக்கட்டுப்பாடு ரொம்பவே அவசியம். (நீதி 23:20, 29-35; 1கொ 6:9, 10) ஒரு கிறிஸ்தவர் மதுபானத்தைக் குடிப்பதாக இருந்தால், அவர் அளவுக்குமீறிக் குடிக்கக் கூடாது. அதோடு, மதுவே கதியென்று இருக்கக் கூடாது. மற்றவர்களுடைய விசுவாசத்தை அவர் குலைக்கவும் கூடாது. (1கொ 10:23, 24; 1தீ 5:23) மதுபானத்தைக் குடிக்கச் சொல்லி நாம் யாரையுமே, முக்கியமாக, இளைஞர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

குடிக்கும் முன் யோசி! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • குடிப்பது சம்பந்தமான சட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் எல்லாருமே ஏன் கீழ்ப்படிய வேண்டும்?—ரோ 13:1-4

  • குடிக்கச் சொல்லி மற்றவர்கள் நம்மைக் கட்டாயப்படுத்தும்போது அதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?—ரோ 6:16

  • குடிப்பதால் வரும் ஆபத்துகளை எப்படித் தவிர்க்கலாம்?