Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

முக்கிய குறிப்புகளை உதாரணங்களோடு விளக்குங்கள்

முக்கிய குறிப்புகளை உதாரணங்களோடு விளக்குங்கள்

மறுசந்திப்புகளையோ பைபிள் படிப்புகளையோ நடத்தும்போது, முக்கியமான குறிப்பைப் புரிந்துகொள்ள மாணவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அந்தக் குறிப்பை உதாரணத்தோடு விளக்கும்போது, அது அவருடைய இதயத்தைத் தொடும். அதோடு, கற்றுக்கொள்கிற விஷயங்களை அவரால் ஞாபகத்தில் வைக்கவும் முடியும்.

மறுசந்திப்புக்காகவோ பைபிள் படிப்புக்காகவோ தயாரிக்கும்போது, முக்கியமான எந்தக் குறிப்பை உதாரணத்தோடு விளக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள். சின்ன சின்ன விவரங்களுக்காக உதாரணங்களைப் பயன்படுத்தாதீர்கள். அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட எளிமையான உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். (மத் 5:14-16; மாற் 2:21; லூ 14:7-11) மாணவருடைய பின்னணி, அவர் எந்தெந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறார் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். (லூ 5:2-11; யோவா 4:7-15) ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட சந்தோஷத்தில் அவருடைய கண்கள் விரிவதைப் பார்க்கும்போது நாமும் சந்தோஷப்படுவோம்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—முக்கிய குறிப்புகளை உதாரணங்களோடு விளக்குவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பைபிள் வசனங்களைப் புரிந்துகொள்ள மாணவருக்கு ஏன் உதவி தேவைப்படலாம்?

  • ரோமர் 5:12-ல் இருக்கிற முக்கியமான குறிப்பை நீட்டா எப்படி உதாரணத்தோடு விளக்கினாள்?

  • சிறந்த உதாரணங்கள் இதயத்தைத் தொடும்

    சிறந்த உதாரணங்களைப் பயன்படுத்துவது மாணவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

  • நம்முடைய அமைப்பு தருகிற வீடியோக்களையும் மற்ற கற்பிக்கும் கருவிகளையும் ஊழியத்தில் நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?