Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு அடையாளம்

கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு அடையாளம்

கண்டிப்பது, முக்கியமாக புத்திமதி கொடுப்பதையும் கற்றுக்கொடுப்பதையும் குறிக்கிறது. திருத்துவதும் தண்டிப்பதும்கூட அதில் அடங்கும். யெகோவாவும் நம்மைக் கண்டிக்கிறார். இப்படிக் கண்டிப்பதால் அவருக்குப் பிரியமான விதத்தில் நம்மால் அவரை வணங்க முடிகிறது. (ரோ 12:1; எபி 12:10, 11) கண்டிப்பை ஏற்றுக்கொள்வது சிலசமயங்களில் கசக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும்போது யெகோவாவின் பார்வையில் நீதியுள்ளவர்களாக இருக்க முடியும்; அவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். (நீதி 10:7) கண்டிக்கிறவரும் சரி, கண்டிப்பைப் பெறுகிறவரும் சரி, எதை மனதில் வைக்க வேண்டும்?

கண்டிக்கிறவர். யெகோவாவைப் போல அன்பாகவும் கனிவாகவும் கண்டிப்பதற்கு மூப்பர்களும், பெற்றோர்களும், மற்றவர்களும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (எரே 46:28) சூழ்நிலைக்கு ஏற்றபடி ஒருவருக்கு கடுமையான கண்டிப்பைக் கொடுக்க வேண்டியிருக்கலாம். அப்போதும்கூட, அவர்மீதுள்ள அன்பினால் அதைச் செய்ய வேண்டும்.—தீத் 1:13.

கண்டிப்பைப் பெறுகிறவர். எந்த விதத்தில் கண்டிப்பு கொடுக்கப்பட்டாலும், அதை ஒதுக்கித்தள்ளாமல் உடனடியாக அதற்குக் கீழ்ப்படிய முயற்சி செய்ய வேண்டும். (நீதி 3:11, 12) பாவ இயல்புள்ள மனிதர்களான நம் எல்லாருக்குமே கண்டிப்பு தேவை. வெவ்வேறு விதங்களில் அது நமக்குக் கொடுக்கப்படுகிறது. பைபிளில் நாம் படிக்கிற விஷயங்கள் அல்லது சபைக் கூட்டங்களில் நாம் கேட்கிற விஷயங்கள் மூலமாக நமக்குக் கண்டிப்பு கிடைக்கலாம். சிலசமயங்களில், நீதிவிசாரணைக் குழு மூலமாக சிலருக்குக் கண்டிப்பு கிடைக்கிறது. கண்டிப்பை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படியும்போது இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, நம் வாழ்க்கை நன்றாக இருக்கும்.—நீதி 10:17.

“யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரர் கேனனின் வாழ்க்கை ஆரம்பத்தில் எப்படி இருந்தது, பிறகு அது எப்படி மாறியது?

  • அவரை யெகோவா எப்படி அன்பாகக் கண்டித்தார்?

  • யெகோவா தரும் கண்டிப்பை மனதார ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்

    அவருடைய அனுபவத்திலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?