கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இந்த ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் எப்போதும் தயார் நிலையில் இருங்கள்
நாம் ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் வாழ்வதால், பிரச்சினைகள் இன்னும் அதிகமாகிக்கொண்டே போகும் என்று நமக்குத் தெரியும். (2தீ 3:1; மத் 24:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு) பேரழிவு வரும்போதெல்லாம் உயிரைப் பாதுகாத்துக்கொள்வது சம்பந்தமான ஆலோசனைகள் யெகோவாவின் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. ஆன்மீக விஷயங்களில் நம்மைத் தயாராக வைத்துக்கொள்வதையும், அடிப்படைப் பொருள்களைத் தயாராக வைத்துக்கொள்வதையும் பற்றி நமக்கு ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு இப்போது கீழ்ப்படிந்தால்தான் அப்போது நம் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.—லூ 16:10.
-
ஆன்மீக விஷயங்களில் நம்மைத் தயாராக வைத்துக்கொள்வது: தினமும் பைபிளை வாசியுங்கள். தனிப்பட்ட படிப்பைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வித்தியாசமான முறைகளில் ஊழியம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். சபையிலுள்ள சகோதர சகோதரிகளைக் கொஞ்சக் காலத்துக்குத் தொடர்புகொள்ள முடியாமல்போனால் பயப்படாதீர்கள். (ஏசா 30:15) யெகோவாவும் இயேசுவும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள்.—od பக். 176 பாரா. 15-17
-
அடிப்படைப் பொருள்களைத் தயாராக வைத்துக்கொள்வது: தேவையான பொருள்களை ஒரு பையில் தயாராக வைத்திருப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தாரும் போதுமான உணவு, தண்ணீர், மருந்து மாத்திரைகள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வேறொரு இடத்தில் கொஞ்சக் காலத்துக்குத் தங்க வேண்டியிருந்தாலும் அந்தச் சூழ்நிலையை சமாளிக்க முடியும்.—நீதி 22:3; g17.5 பக். 4, 6
இயற்கை பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பேரழிவு வருவதற்கு முன்பே நம்மை ஆன்மீக விதத்தில் எப்படித் தயாராக வைத்துக்கொள்ளலாம்?
-
நாம் ஏன்...
-
மூப்பர்களோடு எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்?
-
அவசரத்துக்குத் தேவையான பொருள்களை ஒரு பையில் தயாராக வைக்க வேண்டும்?
-
முன்கூட்டியே எப்படிப்பட்ட பேரழிவுகள் வரலாம் என்பதையும், அப்போது என்ன செய்யலாம் என்பதையும் கலந்துபேச வேண்டும்?
-
-
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மூன்று வழிகளில் நாம் உதவலாம்?
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கோவிட்-19 பெரும் தொற்றிலிருந்து, தயாராக இருப்பது சம்பந்தமான என்ன பாடங்களை நான் கற்றுக்கொள்ளலாம்?’