கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாமீதும் இயேசுமீதும் விசுவாசத்தைப் பலப்படுத்த இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் பயன்படுத்துங்கள்
நம்முடைய பைபிள் மாணவர்கள் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றால், அவர்கள் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். (எபி 11:6) இதைச் செய்வதற்கு இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை நாம் பயன்படுத்தலாம். இந்தப் புத்தகத்தில் முக்கியமான வசனங்கள், எளிமையான விளக்கங்கள், யோசிக்க வைக்கிற கேள்விகள், மனதைத் தொடுகிற வீடியோக்கள், அழகான படங்கள் எல்லாம் இருக்கின்றன. கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ளவும் கடவுளோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ளவும் நம் பைபிள் மாணவர்களுக்கு உதவும்போது, நெருப்பில் எரிந்துபோகாத பொருள்களால் அவர்களுடைய விசுவாசத்தை நாம் கட்டுகிறோம்.—1கொ 3:12-15.
பார்க்க முடியாத கடவுளோடு எப்படி நண்பராக முடியும் என்று சிலர் யோசிக்கிறார்கள். அதனால், யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் அவர்மீது விசுவாசம் வைப்பதற்கும் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
“இன்றும் என்றும் சந்தோஷம்!” புத்தகத்தைப் பயன்படுத்தி யெகோவாமீது விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பைபிள் படிப்பு நடத்துவதற்காக அந்த சகோதரி நன்றாகத் தயாரித்திருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
-
ஏசாயா 41:10, 13-ஐப் பற்றி பைபிள் மாணவர் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அந்த சகோதரி என்ன கூடுதலான கேள்விகளைக் கேட்டார்?
-
வீடியோவையும் பைபிள் வசனங்களையும் பார்த்தது பைபிள் மாணவருக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?
நிறைய பேர் மீட்பு விலையின் அருமையைப் புரிந்துகொள்வதில்லை. அதைக் கடவுள் கொடுத்த பரிசாக நினைத்துப்பார்ப்பதும் இல்லை. (கலா 2:20) அதனால், இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
“இன்றும் என்றும் சந்தோஷம்!” புத்தகத்தைப் பயன்படுத்தி இயேசுமீது விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பைபிள் படிப்பு நடத்துவதற்காக அந்த சகோதரர் நன்றாகத் தயாரித்திருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
-
பைபிள் மாணவருக்கு உதவ “அலசிப் பாருங்கள்” பகுதியிலிருக்கும் பொருத்தமான தகவலை அந்த சகோதரர் எப்படிப் பயன்படுத்தினார்?
-
பைபிள் மாணவருக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?