கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அன்பு . . . தலைக்கனம் அடையாது”
மனத்தாழ்மையாக இருக்க அன்பு நமக்கு உதவும். (1கொ 13:4) சகோதரர்கள்மேல் நமக்கு அன்பு இருந்தால், அவர்களைவிட நம்மை உயர்வாக நினைக்க மாட்டோம். மற்றவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைப் பார்ப்போம், அவர்களுக்கு உதவி செய்ய நம்முடைய திறமைகளைப் பயன்படுத்துவோம். (பிலி 2:3, 4) இப்படிப்பட்ட அன்பை நாம் எந்தளவுக்குக் காட்டுகிறோமோ அந்தளவுக்கு யெகோவாவும் தன்னுடைய விருப்பத்தைச் செய்ய நம்மைப் பயன்படுத்துவார்.
அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—தலைக்கனம் அடையாது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
அப்சலோமிடம் என்னவெல்லாம் இருந்தன?
-
அவற்றை அவன் எப்படித் தவறாகப் பயன்படுத்தினான்?
-
தலைக்கனம் வராமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?–கலா 5:26