Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

‘அன்பு . . . அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது’

‘அன்பு . . . அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது’

உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் அன்பின் அடிப்படையில் செய்வதற்குத்தான் முயற்சி செய்கிறார்கள். ‘அன்பு . . . அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது’ என்று பைபிள் சொல்கிறது. (1கொ 13:4, 6) அதனால் ஒழுக்கக்கேடான, வன்முறையான பொழுதுபோக்குகளை நாம் தவிர்க்கிறோம். அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு ஏதாவது கெட்டது நடந்தால் அதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுவதில்லை. நமக்குக் கஷ்டம் கொடுத்தவர்களுக்குக் கெட்டது நடந்தால்கூட நாம் அப்படிச் செய்வதில்லை.—நீதி 17:5.

அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சவுலும் யோனத்தானும் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது தாவீது என்ன செய்தார்?

  • சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் தாவீது என்ன புலம்பல் பாட்டைப் பாடினார்?

  • சவுல் இறந்ததை நினைத்து தாவீது ஏன் சந்தோஷப்படவில்லை?