Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கலவரம் வெடித்தால் அதைச் சமாளிக்க நீங்கள் தயாரா?

கலவரம் வெடித்தால் அதைச் சமாளிக்க நீங்கள் தயாரா?

இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க கலவரம், தீவிரவாதம், போர் இவையெல்லாம் இன்னும் அதிகமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். (வெளி 6:4) அவற்றைச் சமாளிக்க இப்போதே நாம் எப்படித் தயாராகலாம்?

  • கடவுளோடு நெருக்கமாக இருங்கள்: யெகோவாமீதும் அவருடைய அமைப்புமீதும் இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்தவும் நடுநிலையோடு இருக்கவும் உதவுகிற பைபிள் நியமங்களை... பதிவுகளை... தெரிந்துவைத்திருங்கள். (நீதி 12:5; jr-E பக். 125-126 பாரா. 23-24) சகோதர சகோதரிகளோடு இப்போதே நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.—1பே 4:7, 8

  • ஆரோக்கியமாக, பாதுகாப்பாக இருக்க திட்டமிடுங்கள்: வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதற்கும் தேவையான பொருள்களை கைவசம் வைத்திருப்பதற்கும் திட்டமிடுங்கள். வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமென்று யோசித்துவையுங்கள். அவசரக் காலத்துக்காகத் தயாராக வைத்திருக்கிற பையில் (go bag) எல்லா பொருள்களும் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள். முகக் கவசம், கையுறை போன்றவற்றையும் தேவையான பணத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மூப்பர்களை எப்படித் தொடர்புகொள்ளலாம் என்று தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உங்களை மூப்பர்கள் எப்படித் தொடர்புகொள்ளலாம் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.—ஏசா 32:2; g17.5 பக். 3-7

கலவரம் நடக்கும் சமயத்தில், கடவுளோடு நெருக்கமாக இருப்பதற்கு தேவையானவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள். (பிலி 1:10) வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தால் தவிர வெளியே போகாதீர்கள். (மத் 10:16) உங்களிடம் இருக்கிற உணவையும், பொருள்களையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.—ரோ 12:13.

பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பேரழிவு சமயத்தில் யெகோவா நமக்கு எப்படி உதவி செய்வார்?

  • எந்தெந்த விதங்களில் நம்மைத் தயாராக வைத்துக்கொள்ளலாம்?

  • பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?