கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தற்போது நடக்கும் சம்பவங்களைப் பயன்படுத்தி ஊழியத்தில் பேசுங்கள்
இயேசு ஊழியம் செய்தபோது அவரைச் சுற்றி நடந்த சம்பவங்களைப் பயன்படுத்தி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூ 13:1-5) நீங்களும்கூட நல்ல செய்தியைச் சொல்லும்போது தற்போது நடக்கிற சம்பவங்களைப் பயன்படுத்தி மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டலாம். விலைவாசி உயர்வு, இயற்கைப் பேரழிவு, உள்ளூர் கலவரம், போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு அவர்களை யோசிக்க வைப்பதற்கு ஒரு கேள்வியைக் கேளுங்கள். உதாரணத்துக்கு, இப்படிக் கேளுங்கள்: “இதுக்கு என்னைக்காவது ஒருநாள் முடிவு வருமா?” அல்லது, “இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வுனு நினைக்கிறீங்க?” அதற்குப் பிறகு, அந்த விஷயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு பைபிள் வசனத்தைக் காட்டுங்கள். நீங்கள் சந்தித்த ஒரு நபருக்கு ஆர்வம் இருப்பது தெரியவந்தால், ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு வீடியோவையோ பிரசுரத்தையோ காட்டுங்கள். நம்முடைய ஊழியப் பகுதியில் இருக்கும் மக்களுடைய இதயத்தைத் தொடுவதற்கு நாம் கடினமாக உழைக்கும்போது, ‘எல்லாவற்றையும் நல்ல செய்திக்காகவே செய்கிறோம்’ என்பதில் உறுதியாக இருக்கலாம்.—1கொ 9:22, 23.
என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசினால் உங்களுடைய ஊழியப் பகுதியில் இருக்கும் மக்கள் ஆர்வமாகக் கேட்பார்கள்?