கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஆடியோ பைபிளை நீங்கள் நன்றாகப் பயன்படுத்துகிறீர்களா?
ஆடியோ பைபிள் என்றால் என்ன? புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் ஆடியோ பதிப்புதான் இந்த ஆடியோ பைபிள்! இதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மொழிகளில் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இதில், வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாகவும் சரியான உணர்ச்சிகளுடனும் வாசிக்கப்பட்டு இருப்பதால் பைபிளில் இருக்கிற விஷயங்களை திருத்தமாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆடியோ பைபிளின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், சில மொழிகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு குரல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆடியோ பைபிளால் சிலர் எப்படி நன்மையடைந்திருக்கிறார்கள்? இது கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் கொடுக்கிறது என்று இதை அடிக்கடி கேட்கிறவர்கள் சொல்கிறார்கள். அதோடு, பைபிள் பதிவுகளை நன்றாக கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்றும், நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்றும் சொல்கிறார்கள். (நீதி 4:5) கவலையாக இருக்கும்போது இந்த பதிவுகளைக் கேட்பது ‘இதயத்துக்கு இதமளிக்கிறது’ என்று நிறைய பேர் உணருகிறார்கள்.—சங் 94:19.
கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்படுவதை கேட்பது நம்முடைய வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். (2நா 34:19-21) உங்களுக்கு தெரிந்த ஒரு மொழியில் ஆடியோ பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ இருந்தால் அதை கேட்பதை நீங்கள் ஒரு பழக்கமாக ஆக்கித்தான் பாருங்களேன்!
ஆடியோ பைபிள் தயாரிப்பு—சில காட்சிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:
ஆடியோ பைபிள் தயாரிப்பில் உங்கள் மனதைத் தொட்டது எது?