Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மக்களிடம் பேசுங்கள்—சந்தோஷத்தைக் கண்டுபிடியுங்கள்!

மக்களிடம் பேசுங்கள்—சந்தோஷத்தைக் கண்டுபிடியுங்கள்!

மக்களிடம் சாதாரணமாக பேசினாலே நம்மால் அவர்களிடம் சாட்சி கொடுக்க முடியும்; ஊழியத்தையும் சந்தோஷமாக செய்ய முடியும். ஆனால், எப்படியாவது பைபிள் வசனத்தை காட்ட வேண்டும் அல்லது பைபிள் விஷயங்களை பற்றி பேச வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தால், நாம் பதட்டமாகிவிடலாம். என்ன பேசப் போகிறோம்... எப்படி பேசப் போகிறோம்... என்றெல்லாம் கவலைப்படாமல் அவர்கள்மேல் உண்மையிலேயே அக்கறை காட்டுங்கள். (மத் 22:39; பிலி 2:4) பேசிக்கொண்டு இருக்கும்போது, நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வதற்கு நம்மிடம் நிறைய கருவிகள் இருக்கின்றன.

அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, கீழே இருக்கிற கருவிகள் எப்படி உதவும்?

“இரும்பை இரும்பு கூர்மையாக்கும்”—பேச ஆரம்பிக்க என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:

பேசும் கலையை வளர்க்க என்ன மூன்று படிகள் உதவும்?