கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா பார்ப்பதுபோல் உங்களையே பாருங்கள்
“யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.” (சங் 149:4) நாம் பாவிகளாக இருந்தாலும் நம்மிடம் இருக்கிற நல்ல குணங்களை யெகோவா பார்க்கிறார். எதிர்காலத்தில் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று அவர் யோசித்துப்பார்க்கிறார். சிலசமயத்தில், நம்மிடம் இருக்கிற நல்ல விஷயங்களை நாமே கவனிக்காமல் போய்விடலாம். ஒருவேளை, மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பதால் நம்மை நாமே தாழ்வாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாம் முன்பு செய்த தவறுகளால் யெகோவாவுக்கு நம்மை பிடிக்கவே பிடிக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம். இந்த மாதிரி தோன்றினால், எது நமக்கு உதவி செய்யும்?
மனிதர்களால் பார்க்க முடியாத விஷயங்களை யெகோவாவால் பார்க்க முடியும். (1சா 16:7) அப்படியென்றால், நம்மை பற்றி நமக்கே தெரியாத சில விஷயங்களைக்கூட அவரால் பார்க்க முடியும். அவர் நம்மை எப்படி பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ள பைபிள் உதவி செய்கிறது. அதனால், பைபிள் வசனங்களையும் சில பதிவுகளையும் எடுத்து படித்தால் யெகோவா அவருடைய மக்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
யெகோவா உங்களை மன்னிப்பார் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒரு பையன் மற்றும் அவனுடைய அப்பாவின் உதாரணத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
-
பெரிய பாவத்தை செய்த ஒருவர் தனக்கும் யெகோவாவுக்கும் நடுவில் இருக்கிற பந்தத்தைச் சரிசெய்வதற்கு படிகள் எடுத்தால், எந்த விஷயத்தை நினைத்து அவர் உறுதியாக இருக்கலாம்?—1யோ 3:19, 20.
-
தாவீது மற்றும் யோசபாத்தைப் பற்றி படித்ததும் ஆழமாக யோசித்துப்பார்த்ததும் அந்த சகோதரருக்கு எப்படி பிரயோஜனமாக இருந்தது?