Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவா, “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறார்”

யெகோவா, “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறார்”

ஒவ்வொரு வருஷமும் நிறைய இளம் பிள்ளைகள் யெகோவாவின் நண்பராக ஆகிறார்கள். (சங் 110:3) உங்கள் ஒவ்வொருவர்மேலும் யெகோவா ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்; அவர் அதை புரிந்துகொள்கிறார். அவருக்கு சேவை செய்ய உங்களுக்கு உதவுவதாக வாக்கும் கொடுத்திருக்கிறார். உங்களுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லையா? அல்லது, அவர்களில் யாரோ ஒருவர் யெகோவாவை வணங்கவில்லையா? கவலைப்படாதீர்கள்! யெகோவா, “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறார்” என்பதை ஒருநாளும் மறந்துவிடாதீர்கள்! (சங் 68:5) உங்கள் வீட்டில் எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் சரி, யெகோவா கொடுக்கும் பயிற்சியோடு உங்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.—1பே 5:10.

விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்—ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • டாமி, சார்லஸ் மற்றும் ஜிம்மியுடைய உதாரணத்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவர்களுக்கு சங்கீதம் 27:10 என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது?