கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்பே தயாராக இருக்கிறீர்களா?
உலகத்தையே உலுக்குகிற சம்பவங்கள் நடக்கும்போது பொருளாதாரம் அடி வாங்குகிறது. இதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், நாம் கடைசி நாட்களின் கடைசியில் வாழ்கிறோம். அதுமட்டுமல்ல, “நிலையில்லாத செல்வங்கள்மீது” நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும் பைபிள் எச்சரிக்கிறது. (1தீ 6:17; 2தீ 3:1) பொருளாதார நெருக்கடியை சந்திக்க நாம் எப்படித் தயாராக இருக்கலாம்? இதைப் பற்றி யோசபாத் ராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
எதிரிகள் வந்து தாக்கப்போகிறார்கள் என்று யோசபாத்துக்கு தெரிந்தபோது அவர் யெகோவாவை நம்பினார். (2நா 20:9-12) அதேசமயத்தில், நகரத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கு அவரால் முடிந்த சில நடவடிக்கைகளையும் எடுத்தார். அவர் நகரங்களை பலப்படுத்தினார், புறக்காவல் படையை நிறுத்தினார். (2நா 17:1, 2, 12, 13) யோசபாத்தைப் போலவே நாமும் யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும்; கஷ்டமான சூழ்நிலையை சமாளிப்பதற்கு நம்மால் முடிந்த சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பேரழிவு வருவதற்கு முன்பாகவே அதைச் சமாளிக்க நாம் எப்படித் தயாராகலாம்?
-
அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்ய நாம் எப்படித் தயாராகலாம்?