Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 20-26

பாட்டு 102; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ஏன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?

(10 நிமி.)

மற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்குச் சந்தோஷமாக இருக்கும் (சங் 41:1; w18.08 பக். 22 பாரா. 16-18)

மற்றவர்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு யெகோவா உதவி செய்வார் (சங் 41:2-4; w15 12/15 பக். 24 பாரா 7)

மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது நாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறோம் (சங் 41:13; நீதி 14:31; w17.09 பக். 12 பாரா 17)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘JW Library-ஐப் பயன்படுத்த என் சபையில் யாருக்காவது உதவி தேவைப்படுகிறதா?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 40:5-10—ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்குத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள தாவீது செய்த ஜெபம் நமக்கு எப்படி உதவுகிறது? (it-2-E பக். 16)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பார்ப்பதற்கு சந்தோஷமாகத் தெரியும் ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பார்ப்பதற்கு சோகமாகத் தெரியும் ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 14 குறிப்பு 6. கூட்டங்களில் பதில் சொல்ல தயங்கும் ஒருவரிடம் “அலசிப் பாருங்கள்” பகுதியிலுள்ள “சபையில் யெகோவாவைப் புகழுங்கள்” என்ற கட்டுரையில் இருக்கும் ஒரு குறிப்பைக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 138

7. வயதானவர்களுக்கு நன்மை செய்யுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

சபையில் இருக்கும் வயதானவர்கள் செய்யும் வேலைகளை எல்லாம் யெகோவா ரொம்ப பெரிதாக மதிக்கிறார். நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். (எபி 6:10) சகோதர சகோதரிகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, பயிற்சி கொடுப்பதற்காக, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இத்தனை வருஷங்களாக அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். உங்களுக்காகவும் அவர்கள் நிறைய செய்திருக்கலாம். ஏற்கெனவே அவர்கள் செய்த எல்லாவற்றுக்காகவும் இப்போது அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்காகவும் நீங்கள் எப்படி அவர்களுக்கு நன்றியோடு இருக்கலாம்?

‘சகோதரர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்’ என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • சகோதரர் ஹோ-ஜனிடமிருந்து சகோதரர் ஜி-ஹுன் என்ன கற்றுக்கொண்டார்?

  • உங்கள் சபையில் இருக்கும் வயதானவர்களை நீங்கள் ஏன் உயர்வாக நினைக்கிறீர்கள்?

  • அன்பு காட்டிய சமாரியன் பற்றிய உவமையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

  • சகோதரர் ஹோ-ஜனுக்கு உதவி செய்ய ஜி-ஹுன் மற்றவர்களையும் கூப்பிட்டது ஏன் ஒரு நல்ல விஷயம் என்று சொல்லலாம்?

நம் சபையில் இருக்கும் வயதானவர்களுக்கு என்னவெல்லாம் தேவை என்று நன்றாக யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு உதவி செய்ய நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவை என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எப்படிச் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.—யாக் 2:15, 16.

கலாத்தியர் 6:10-ஐ வாசியுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • உங்கள் சபையில் இருக்கும் வயதானவர்களுக்கு “நன்மை செய்ய” நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 8; ஜெபம்