Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 6-12

பாட்டு 87; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சலடையாதே”

(10 நிமி.)

கெட்ட மக்களால் நாம் இன்று வலியையும் வேதனையையும்தான் அனுபவிக்கிறோம் (சங் 36:1-4; w17.04 பக். 10 பாரா 4)

கெட்டவர்களைப் பார்த்து நாம் எரிச்சலடைவதுகூட நமக்குத்தான் கெடுதல் (சங் 37:1, 7, 8; w22.06 பக். 10 பாரா 10)

யெகோவாவுடைய வாக்குறுதிகள்மேல் நம்பிக்கை வைத்தால் நமக்குச் சமாதானம் கிடைக்கும் (சங் 37:10, 11; w03 12/1 பக். 13 பாரா 20)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மோசமான விஷயங்களைப் பற்றிய செய்திகளுக்கு நான் அதிகமாக ஆர்வம் காட்டுகிறேனா?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 36:6—எந்த அர்த்தத்தில் யெகோவாவுடைய “நீதி கம்பீரமான மலைகளைப் போல” [அதாவது, “கடவுளின் மலைகளைப் போல,” அடிக்குறிப்பு] இருக்கிறது என்று சங்கீதக்காரர் சொன்னார்? (it-2-E பக். 445)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. முன்பு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்கு இப்போது பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) ijwbv 45—பொருள்: சங்கீதம் 37:4-ன் அர்த்தம் என்ன? (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 33

7. “இக்கட்டான காலத்தை” சந்திக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

இயற்கை பேரழிவுகளாலும், மனிதர்கள் செய்கிற நாசத்தினாலும் உலகம் முழுவதும் நம்முடைய சகோதர சகோதரிகள் அவர்களுடைய பொருள்களையும் அன்பானவர்களையும் இழந்திருக்கிறார்கள். (சங் 9:9, 10) உண்மை என்னவென்றால், இந்த மாதிரியான “இக்கட்டான காலம்” யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் அதை சமாளிப்பதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும்.

ஒரு பேரழிவு வரும்போது அதிலிருந்து தப்பிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். a அதோடு அதை சமாளிக்க வேறு என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டும்?

  • மனதைத் தயார்படுத்துங்கள்: பேரழிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் ஒருவேளை வந்தால் என்ன செய்வது என்பதையும் முன்பே யோசித்து வையுங்கள். உங்களிடம் இருக்கும் பணம் பொருள்மீது அதிகமாக ஆசை வைக்காதீர்கள். அப்போதுதான் நீங்கள் ஞானமாக நடந்துகொள்வீர்கள். (ஆதி 19:16; சங் 36:9) பணம் பொருளை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக, உங்கள் உயிரையும் மற்றவர்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பீர்கள். அதுமட்டுமல்ல, ஒருவேளை பேரழிவில் நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால்கூட கவலையிலேயே மூழ்கிவிட மாட்டீர்கள்.—சங் 37:19

  • யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை இப்போதே வளர்த்துக்கொள்ளுங்கள்: நம்மை பார்த்துக்கொள்வதற்கான திறமையும் ஆசையும் யெகோவாவுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். (சங் 37:18) பேரழிவு வருவதற்கு முன்பே அடிக்கடி ஒரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்... உயிர் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது... என்ற நிலைமையில்கூட யெகோவாவால் நம்மை வழிநடத்த முடியும், நமக்கு ஆதரவாக இருக்க முடியும்.—எரே 45:5; சங் 37:23, 24

யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் நம்பும்போது ‘இக்கட்டான காலத்தில் அவர் நமக்கு ஒரு கோட்டையாக இருப்பார்’.—சங் 37:39.

பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

  • இக்கட்டான காலத்தில் யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்?

  • பேரழிவை சந்திக்க நாம் எப்படி தயாராகலாம்?

  • பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவி செய்யலாம்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 57; ஜெபம்