யார் யெகோவாவின் கூடாரத்தில் தங்குவார்?
ஒருவர் யெகோவாவின் கூடாரத்தில் தங்க வேண்டும் என்றால் அவர் யெகோவாவின் நண்பராக இருக்க வேண்டும், அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும், அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். யெகோவா தன்னுடைய நண்பரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை 15-வது சங்கீதம் சொல்கிறது
யெகோவாவின் கூடாரத்தில் தங்குபவர். . .
-
உத்தமமாக நடக்க வேண்டும்
-
மனதார உண்மையை பேச வேண்டும்
-
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும்
-
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
-
எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
யெகோவாவின் கூடாரத்தில் தங்குபவர். . .
-
மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசக் கூடாது
-
மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது
-
சகோதர சகோதரிகள் காட்டும் அன்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது
-
யெகோவாவை வணங்காதவர்களோடும் அவருக்கு கீழ்படியாதவர்களோடும் நட்பு வைக்கக் கூடாது
-
லஞ்சம் வாங்கக் கூடாது