கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
JW லைப்ரரியை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்
தனியாக படிக்கும்போது:
-
பைபிளையும் தின வசனத்தையும் படிக்கலாம்.
-
பத்திரிகைகளையும் மற்ற புத்தகங்களையும் படிக்கலாம். புக் மார்க் ஆப்ஷனை பயன்படுத்தலாம்
-
கூட்டங்களுக்கு தயாரிக்கலாம், பதிலை குறித்து வைத்துக்கொள்ளலாம்
-
வீடியோக்களை பார்க்கலாம்
கூட்டங்களில்:
-
பேச்சாளர் சொல்லும் பைபிள் வசனங்களை பார்க்கலாம். முன்பு பார்த்த வசனங்களை மறுபடியும் பார்க்க ‘இதுவரை பார்த்தவை’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்
-
கூட்டங்களில் பயன்படுத்தப்போகும் எல்லா புத்தகங்களையும் கொண்டு போவதற்கு பதிலாக மொபைலில் அல்லது டேப்லெட்டில் அதை பார்க்கலாம், பாடல்களையும் பாடலாம். பாட்டு புத்தகத்தில் பிரிண்ட் ஆகாத நிறைய புது பாடல்கள் JW லைப்ரரியில்தான் இருக்கிறது
ஊழியத்தில்:
-
ஆர்வமாக கேட்பவர்களுக்கு JW லைப்ரரியில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைக் காட்டலாம். பிறகு, அவர்களுடைய மொபைலில் அல்லது டேப்லெட்டில் JW லைப்ரரி அப்ளிகேஷனையும் பிரசுரங்களையும் டவுன்லோட் செய்வதற்கு உதவலாம்
-
பைபிள் வசனங்களை சுலபமாக கண்டுபிடிக்க ‘தேடவும்’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம். வசனத்தில் இருக்கும் முக்கிய வார்த்தைகளை டைப் செய்து தேடலாம்
-
வீடியோவை காட்டலாம். ஊழியத்தில் பார்க்கும் நபருக்கு பிள்ளைகள் இருந்தால், யெகோவாவின் நண்பனாக வீடியோக்களில் ஏதாவது ஒன்றை காட்டலாம். அல்லது பைபிள் படிப்பதற்கான அவருடைய ஆர்வத்தை வளர்க்க பைபிளை ஏன் படிக்க வேண்டும்? வீடியோவை காட்டலாம். ஒருவேளை, வேறு மொழி பேசும் நபர்களை பார்த்தால் அவர்களுடைய மொழியிலேயே ஒரு வீடியோவை காட்டலாம்
-
வேறு மொழி பேசுபவர்களிடம், அவர்களுடைய மொழியில் பைபிளை டவுன்லோட் செய்து வசனங்களை காட்டலாம். ஒரு வசனத்தின் எண் மீது க்ளிக் செய்தால் மற்ற மொழிகளில் பார்ப்பதற்கான ஐகான் தெரியும். அதை க்ளிக் செய்தால் மற்ற மொழிகளில் அந்த வசனத்தை பார்க்க முடியும்