Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மே 2-8

யோபு 38-42

மே 2-8
  • பாட்டு 63; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்யும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்”: (10 நிமி.)

    • யோபு 42:7, 8—எலிப்பாஸ், பில்தாத், சோப்பாருக்காக ஜெபம் செய்யும்படி யோபுவிடம் யெகோவா சொன்னார் (w13 6/15 21 ¶17; w98 5/1 30 ¶3-6)

    • யோபு 42:10—மூன்று நண்பர்களுக்காக யோபு ஜெபம் செய்த பிறகு அவருடைய வியாதியை யெகோவா குணப்படுத்தினார் (w98 5/1 31 ¶3)

    • யோபு 42:10-17—விசுவாசத்தோடு கஷ்டங்களை சகித்ததால், யோபுவை யெகோவா அதிகமாக ஆசீர்வதித்தார் (w94 11/15 20 ¶19-20)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோபு 38:4-7—“விடியற்காலத்து நட்சத்திரங்கள்” யார்? அவர்களைப் பற்றி என்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்? (bh 97 ¶3; w06 1/15 3 ¶2)

    • யோபு 42:3-5—யோபுவைப் போல நாமும் யெகோவாவைப் ‘பார்க்க’ என்ன செய்ய வேண்டும்? (w15 10/15 8 ¶16-17)

    • யோபு 38 முதல் 42 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோபு 41:1-26

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மொபைலை அல்லது டேப்லெட்டை பயன்படுத்துவது பற்றி பேசும்போது, “JW லைப்ரரியை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்” என்ற கட்டுரையில் இருக்கும் குறிப்புகளை சுருக்கமாக சொல்லுங்கள். ஊழியத்தில் எத்தனை தடவை வீடியோக்களை காட்டினார்கள் என்பதை மறக்காமல் ஊழிய அறிக்கையில் போடும்படி சொல்லுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 60

  • JW லைப்ரரியை பயன்படுத்துகிறீர்களா?”: (15 நிமி.) முதல் 5 நிமிடங்களுக்கு கட்டுரையில் இருக்கும் குறிப்புகளை கலந்து பேசுங்கள். பிறகு, இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக காட்டி, அதில் இருக்கும் முக்கியமான குறிப்புகளை சுருக்கமாக கலந்து பேசுங்கள்: “JW லைப்ரரியை” பயன்படுத்துங்கள், “JW லைப்ரரியில்” டவுன்லோட் செய்து பயன்படுத்துவது எப்படி?, “JW லைப்ரரியில்” வாசிப்பதற்கு சில குறிப்புகள். மே 16-ல் ஆரம்பிக்கும் வாரத்தில் JW லைப்ரரியை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்என்ற கட்டுரையை சிந்திப்போம். அதற்கு முன்பு, “JW லைப்ரரி” அப்ளிகேஷனை மொபைலில் அல்லது டேப்லெட்டில் டவுன்லோட் செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) பைபிள் கதை 113

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 98; ஜெபம்