மே 9-15
சங்கீதம் 1-10
பாட்டு 99; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய ஆசீர்வாதத்தை பெற அவருடைய மகன் இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
[சங்கீத புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை காட்டுங்கள்.]
சங் 2:1-3—உலக ஆட்சியாளர்கள் யெகோவாவோடும் இயேசுவோடும் பகையை வளர்ப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது (w04 7/15 16-17 ¶4-8)
சங் 2:8-12—இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொண்டால்தான் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க முடியும் (w04 8/1 5 ¶2-3; w04 7/15 19 ¶19)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 2:7—‘கர்த்தருடைய தீர்மானம்’ என்பது என்ன? (w06 5/15 17 ¶6; w04 7/15 18 ¶13)
சங் 3:2—சேலா என்பது என்ன? (w06 5/15 18 ¶3)
1 முதல் 10 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 8:1-9:10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் முதல் பக்கம். மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து ஒரு வசனத்தை வாசியுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியின் முதல் பக்கம். JW லைப்ரரியில், ‘தேடவும்’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி, அவர் கேட்கும் கேள்விக்கு ஏற்ற வசனத்தை கண்டுபிடித்து வாசியுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 12 ¶12-13—பைபிள் படிப்பவருடைய மொபைலில் அல்லது டேப்லெட்டில் JW லைப்ரரியை டவுன்லோட் செய்ய அவரை உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கிங்டம் ஹால்ல விளையாட கூடாது: (5 நிமி.) கலந்து பேசுங்கள். யெகோவாவின் நண்பனாக... கிங்டம் ஹால்ல விளையாட கூடாது என்ற வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோக்கள் > யெகோவாவின் நண்பனாக... என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, சிறு பிள்ளைகளை மேடைக்கு கூப்பிட்டு வீடியோவை பற்றி சில கேள்விகளைக் கேளுங்கள்.
முழுநேர சேவையில் கிடைக்கும் சந்தோஷம்: (10 நிமி.) முழுநேர சேவை செய்யும் ஒன்று அல்லது இரண்டு பேரை பேட்டி எடுங்கள். அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். முழுநேர சேவையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இந்த சேவையில் என்னென்ன சவால்களை சந்தித்திருக்கிறார்கள்? அந்த சவால்களை சமாளித்து தொடர்ந்து முழுநேர சேவை செய்ய எது அவர்களுக்கு உதவி செய்தது? என்ன ஆசீர்வாதங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது? ஒழுங்கான பயனியர் சேவை செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 134; ஜெபம்