யெகோவாவுடைய ஆசீர்வாதத்தை பெற அவருடைய மகன் இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்
உலக ஆட்சியாளர்கள் யெகோவாவோடும் இயேசுவோடும் பகையை வளர்ப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது
-
உலக ஆட்சியாளர்கள், இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள் என தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது
-
இந்த தீர்க்கதரிசனம், இயேசு பூமியில் இருந்தபோது நிறைவேறியது. இப்போது பெரிய அளவில் நடந்துவருகிறது
-
தேசங்கள் பிரயோஜனம் இல்லாத காரியத்தை சிந்திக்கிறார்கள் என்று சங்கீதக்காரன் சொல்கிறார். அதாவது, உலக ஆட்சியாளர்கள் போடும் எந்த திட்டமும் பலிக்காது, அவர்கள் தோல்விதான் அடைவார்கள் என்று சொல்கிறார்
இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொண்டால்தான் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க முடியும்
-
கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவை எதிர்க்கும் எல்லாரும் அழிந்துபோவார்கள்
-
இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்பவர்கள் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் இருப்பார்கள்