Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் முன்பக்கம்)

கேள்வி: [துண்டுப்பிரதியில் இருக்கும் கேள்வியைக் காட்டுங்கள்.] எதிர்காலத்த பத்தி என்ன நினைக்கிறீங்க? நம்மள படைச்ச கடவுள் இத பத்தி என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்கு காட்ட ஆசப்படுறேன். [அவர் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.]

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இந்த உலகத்த கடவுள் நல்ல நிலமைக்கு மாத்துவார். அது எப்படினு இதுல சொல்லியிருக்கு.

எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம்)

கேள்வி: 2000 வருஷத்துக்கு முன்னாடி சொன்ன ஒரு வாக்குறுதிய உங்களுக்கு வாசிச்சு காட்ட ஆசப்படுறேன். [அவர் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.] இது நடக்கும்னு நினைக்கிறீங்களா?

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இது கண்டிப்பா நடக்கும். அத நம்பறதுக்கான காரணம் இதுல இருக்கு.

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி

கேள்வி: ஒவ்வொரு நாளும் நம்ம வாழ்க்கையில நிறைய பிரச்சினைகள் வருது. அத பத்தி கடவுள்கிட்ட வேண்டுறதுனால ஏதாவது பிரயோஜனம் இருக்கா? [அவர்கள் விரும்பினால் வசனத்தை காட்டுங்கள்.]

வசனம்: பிலி 4:6, 7

பிரசுரம்: [பக்கம் 24, பாரா 2-ஐ காட்டுங்கள்.] கடவுள்கிட்ட வேண்டுறதுனால என்ன பலன் கிடைக்கும்னு இதுல சொல்லியிருக்கு.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.