டோங்காவில் பிரசங்கிக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் மே 2018  

இப்படிப் பேசலாம்

மனிதர்கள் மற்றும் பூமிக்கான எதிர்காலத்தைப் பற்றி தொடர்ந்து பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா

ஜெபம் செய்வது, பைபிள் படிப்பது, ஊழியம் செய்வது, கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களை கிறிஸ்தவர்கள் ஏன் தவறாமல் செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவைப் பின்பற்ற உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துங்கள்

தங்கள் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படித் தயார்படுத்தலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

விசுவாசத்தைப் பலப்படுத்திய ஒரு தரிசனம்

இயேசு தோற்றம் மாறிய காட்சியைப் பார்த்தது, பேதுருவின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது? இந்த பைபிள் தீர்க்கதரிசனம் நம்மை எப்படிப் பலப்படுத்துகிறது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கடவுள் இணைத்து வைத்ததை . . .”

திருமண ஒப்பந்தத்தை கிறிஸ்தவத் தம்பதிகள் முக்கியமானதாக நினைக்கிறார்கள். பைபிள் நியமங்களின்படி வாழும்போது அவர்களால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மற்ற எல்லாரையும்விட இவள் அதிகமாகப் போட்டாள்

மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளைக் காணிக்கையாகக் கொடுத்த ஏழை விதவை பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மனித பயம் என்ற கண்ணியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

அப்போஸ்தலர்கள் ஏன் பயத்துக்கு இடம்கொடுத்துவிட்டார்கள்?இயேசு உயிரோடு வந்ததற்குப் பிறகு, எதிர்ப்புகள் மத்தியிலும் தைரியமாகப் பிரசங்கிக்க மனம் திருந்திய அப்போஸ்தலர்களுக்கு எது உதவியது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்

ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைச் சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் எப்படி ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்’?