மே 14-20
மாற்கு 9-10
பாட்டு 136; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“விசுவாசத்தைப் பலப்படுத்திய ஒரு தரிசனம்”: (10 நிமி.)
மாற் 9:1—கடவுளுடைய அரசாங்கத்தில் தனக்குக் கிடைக்கப்போகிற மகிமையை, தன்னுடைய அப்போஸ்தலர்களில் சிலர் ஒரு தரிசனத்தில் பார்ப்பார்கள் என்று இயேசு வாக்குக் கொடுத்தார் (w05 1/15 பக். 12 பாரா. 9-10)
மாற் 9:2-6—தோற்றம் மாறிய இயேசு, ‘எலியாவோடும்’ ‘மோசேயோடும்’ பேசிக்கொண்டிருப்பதை பேதுருவும் யாக்கோபும் யோவானும் பார்த்தார்கள் (w05 1/15 பக். 12 பாரா 11)
மாற் 9:7—இயேசு தன்னுடைய மகன் என்பதை உறுதிப்படுத்த யெகோவாவே பேசினார் (“ஒரு குரல்” என்ற மாற் 9:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மாற் 10:6-9—திருமணத்தைப் பற்றிய எந்த நியமத்தை இயேசு சிறப்பித்துக் காட்டினார்? (w08 2/15 பக். 30 பாரா 8)
மாற் 10:17, 18—தன்னை “நல்ல போதகரே” என்று அழைத்த ஒரு மனிதனை இயேசு ஏன் திருத்தினார்? (“நல்ல போதகரே,” “கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது” என்ற மாற் 10:17, 18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)
மாற்கு 9 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 9:1-13
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w04 5/15 பக். 30-31—பொருள்: மாற்கு 10:25-ல் இருக்கிற இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 36
“கடவுள் இணைத்து வைத்ததை . . .”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பும் மரியாதையும் திருமண பந்தத்தைப் பாதுகாக்கும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 2 பாரா. 1-12
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 116; ஜெபம்