Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கடவுள் இணைத்து வைத்ததை . . .”

“கடவுள் இணைத்து வைத்ததை . . .”

ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன், விவாகரத்துப் பத்திரத்தைத் தயார் செய்ய வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. மக்கள் அவசரப்பட்டு விவாகரத்து செய்வதைத் தடுக்க இது உதவியது. ஆனால் இயேசுவின் காலத்தில், விவாகரத்து செய்வதை மதத் தலைவர்கள் சுலபமாக்கினார்கள். எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் மனைவியை விவாகரத்து செய்ய முடிந்தது. (“விவாகரத்துப் பத்திரத்தை” என்ற மாற் 10: 4-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “மனைவியை விவாகரத்து செய்துவிட்டு,” “மனைவிக்குத் துரோகம் செய்கிறான்” என்ற மாற் 10: 11-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்) திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தவரும், அதை அங்கீகரித்தவரும் யெகோவாதான் என்பதை இயேசு குறிப்பிட்டார். (மாற் 10:2-12) கணவனும் மனைவியும் “ஒரே உடலாக” இருப்பார்கள் என்று சொன்னார். இதன் மூலம், அந்தப் பந்தம் நிரந்தரமானது என்பதைக் காட்டினார். மத்தேயு புத்தகத்தில் இருக்கிற இணைவசனம், ‘பாலியல் முறைகேடு’ ஒன்றுதான் விவாகரத்து செய்வதற்கான ஒரே வேதப்பூர்வ காரணம் என்பதைக் காட்டுகிறது.—மத் 19:9.

திருமணத்தைப் பொறுத்தவரை, இன்று நிறையப் பேருக்குப் பரிசேயர்களின் மனநிலைதான் இருக்கிறது, இயேசுவைப் போல அவர்கள் யோசிப்பதில்லை. இந்த உலகத்தில் இருக்கிற பலர், பிரச்சினைக்கு ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று நினைக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவத் தம்பதிகள் அப்படி நினைப்பதில்லை; திருமண ஒப்பந்தத்தை அவர்கள் மிக மிக முக்கியமானதாக நினைக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தால், பைபிளின் உதவியோடு அதைச் சரிசெய்யப் பார்க்கிறார்கள். அன்பும் மரியாதையும் திருமண பந்தத்தைப் பாதுகாக்கும் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • உங்கள் மணவாழ்க்கையில் நீதிமொழிகள் 15:1-ன்படி எப்படி நடந்துகொள்ளலாம்? இது ஏன் முக்கியம்?

  • நீதிமொழிகள் 19:11-ன்படி நடந்துகொள்வதன் மூலம் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்?

  • உங்கள் திருமண பந்தம் முறிகிற நிலையில் இருந்தால், ‘விவாகரத்து செய்வதைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக என்னென்ன கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்?

  • நீங்கள் ஒரு நல்ல கணவராக அல்லது மனைவியாக இருப்பதற்கு, மத்தேயு 7:12 எப்படி உதவும்?